Connect with us

இந்தியா

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

Published

on

  1. ஐ.நா. பொதுச் சபையின் ஒரு குழு, இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு, பாலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணயம் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் தீர்மான வரைவை ஆதரித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு 162 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 8 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமலும் இருந்தன
  2. தங்கத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை. சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ரீனியம் என்ற வேதிப்பொருளை தங்கத்தில் கலப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வரும் நிலையில் தங்கத்தில் கலப்படம் செய்வதற்கான பொருளை தயாரிப்பவர்கள் பயன்படுத்துபவர்கள் என யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு
  3. ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக-வை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் வாகை சூடி வருகிறது. அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட, 3,462 பஞ்சாயத்து சமிதி வார்டுகளில், காங்கிரஸ் 1,882 இடங்களை கைப்பற்றி உள்ளது. பாஜக 1,149 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.
  4. . அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதி மேரி க்ளூசென்காம்ப் பெரெஸ், வாகனங்களின் அதிக ஒளி வீசும் ஹெட்லைட்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் LIGHT Safety Act (H.R. 7772) என்ற மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மசோதாவின்படி, வாகனங்களின் லோ-பீம் (Low-beam) ஹெட்லைட்கள் வெளியிடும் அதிகபட்ச ஒளியின் அளவை நிர்ணயிக்க அமெரிக்கப் போக்குவரத்துத் துறைக்கு அதிகாரம் வழங்கப்படும். இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான வெளிச்சத்தைத் தக்கவைத்துக் கொண்டே, எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களைக் கூசச் செய்யும் அதிகப்படியான ஒளியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
  5. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.91720க்கும் ஒரு கிராம் ரூ.11485க்கும் குறைந்து விற்பனையாகிறது.
  6. கோழிகளைப் பறவைக் காய்ச்சலிலிருந்த காதுகாக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் பறவை காய்ச்சல் தடுப்புசி அறிமுகம்.
  7. டெல்லி விமான நிலையம் அருகே 60 நாட்களுக்கு ட்ரோன்கள், லேசர் விளக்குகளுக்குத் தடை – விதிமீறினால் கடும் நடவடிக்கை!
  8. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் தரவுத்தளம் மீண்டும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குற்றவியல் பதிவுகள் தொடர்பான தகவல்களைத் திருடும் நோக்கில் இந்த ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது. சில மாதங்களிலேயே FBI அமைப்பில் நடந்துள்ள இரண்டாவது பெரிய சைபர் பாதுகாப்பு சம்பவம் இதுவாகும். கடந்த செப்டம்பரில் ShinyHunters என்ற ஹேக்கர் குழு FBI ஆட்சேர்ப்பு இணையதளத்தைத் தாக்கியது.
  9. பெங்களூருவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ராஜா விஜய் குமார் (Rajah Vijay Kumar), பாதரசம் போன்ற வேதியியல் தனிமங்களைத் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பிற தனிமங்களாக மாற்றும் நோக்கில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தொழில்நுட்பத்திற்கு Gravitoradiophysical Nuclear Transmutation (GNT) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக அவர் உருவாக்கியுள்ள பிரத்யேக கருவி ‘Boom Tube’ என அழைக்கப்படுகிறது.
  10. நெருக்கடியில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்: கடன் சுமை, 13 விமானங்கள் மட்டுமே இயக்கத்தில் இருப்பதாகத் தகவல் – விமானங்கள் ரத்து, தாமதம் குறித்து டிஜிசிஏ விளக்கம் கேட்பு!
  11. லாரல் கே (Laurel Kaye) என்ற இளம் பெண், டியூக் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வேதியியல் படித்துக்கொண்டிருந்தபோது, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் Mars One என்ற திட்டத்தின் இறுதிப் பட்டியலில் தேர்வான 100 பேரில் ஒருவராக இடம்பெற்றார். செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பயணத்திற்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. அங்கிருந்து மீண்டும் பூமிக்குத் திரும்புவதற்கான ஏற்பாடு இல்லை. அதாவது, இந்தப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தால், வாழ்நாள் முழுவதும் செவ்வாய் கிரகத்திலேயே வாழ வேண்டிய சூழல் ஏற்படலாம்.
  12. மின்னணு கழிவிலிருந்து தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு! மின்னணு கழிவுகள் (E-Waste) உலகளவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றிலிருந்து மதிப்புமிக்க உலோகங்களை மீட்டெடுக்கும் புதிய முயற்சியில் அமெரிக்க நிறுவனமான Jeet Basi தலைமையிலான Modern Mining Technology Corp முக்கிய முன்னேற்றத்தை அறிவித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized5 minutes ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா18 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா1 நாள் ago

இரவு நேரச் செய்திகள் – 20.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.11.2026

Uncategorized1 நாள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

சினிமா6 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

சினிமா4 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா4 நாட்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா7 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா2 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

Uncategorized1 நாள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

Translate »
operation maintenance..