இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.06.2026

- வரும் ஜீன் 30 முதல் புதிய விளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப் படுத்தப் படுவதால் காகித ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என இணையத்தில் பரவும் வதந்திகளை நம்பாதீர்கள். என ஒன்றிய அரசு விளக்கம்.
- பசிபிக் பெருங்கடலில் மத்திய மற்றம் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் “எல் நினோ“ காலநிலை சூழல் தற்போது தீவிரமடைந்து வருவதாகவும் இது நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் புவி அமைப்பு அறிவியல் அமைப்பும் எச்சரித்துள்ளன.
- அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஷாப்பிங் செய்யும் வேலைகளை முதலமைச்சர் செய்து வருகிறார். – மு.க.ஸ்டாலின் பேச்சு.
- ஒடிசாவில் உள்ள அணைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் மழலையர் கல்வி எல்கேஜி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவிப்பு.
- 100 – 200 யூனிட் ரூ 2.35 பைசா இருந்த மின் கட்டணம் இப்போது ரூ. 4.70பைசாவாக அந்த ஒரு அறிவிப்பு இன்றி மின்சாரத்துறை ஏற்றியுள்ளது…
- காங்கிரசில் 3 முறை எம்எல்ஏ வாக இருந்து பாஜகவிற்கு சென்ற விஜயதாரணி இப்போது பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
- அமலாக்கத்துறைக்கம் மோடி அரசுக்கும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவதை ராகுல்காந்தி நிறுத்த வேண்டும். – சிபிஎம் பொதுச்செயலாளர் பேபி.
- ஜீன் 12 மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப் படாததால் டெல்டா விவசாயிகள் குமுறல்.
- தேர்வு முடிவுகள் வெளியாகி 1 மாதம் கடந்த பின்னரும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தயாராகவில்லை என கோட்டூர்புரத்தில் நடைபெற்ற கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா பேச்சு.
- நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி அடைந்ததால் 170 எம்பி தொகுதிகளை மட்டும் மறுவரையறை செய்ய முடிவு: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு புதிய பரிந்துரை

















