ஆரோக்கியம்
கோடை காலத்தில் இளநீரா? கரும்பு ஜூஸா? எது சிறந்தது – முழு விளக்கம்!
Published
4 மாதங்கள் agoon
By
Poovizhi
கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், சோர்வை தணிக்கவும் மக்கள் இயற்கை பானங்களை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் போன்ற பானங்கள் கோடை காலத்தில் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக உள்ளன.
இரண்டு பானங்களும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், அவற்றின் பயன்கள் வேறுபடுகின்றன. எனவே, உங்கள் உடல்நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப எந்த பானம் உங்களுக்கு சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கரும்பு ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்:
கரும்பு ஜூஸ் இயற்கையான இனிப்புடன் உடனடி ஆற்றலை வழங்கும் சிறந்த பானமாகும். இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கோடை காலத்தில் இதை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து ஹீட் ஸ்ட்ரோக் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
இளநீர் குடிப்பதன் நன்மைகள்:
இளநீர் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் காப்பாற்றும் சிறந்த இயற்கை பானமாகும். இது செரிமானத்தை சீராக்கி, அசிடிட்டி பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. குறைந்த கலோரி உள்ளதால் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றது. மேலும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
எது சிறந்தது?
இளநீரும் கரும்பு ஜூஸும் இரண்டும் கோடை காலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான பானங்களாகும். உடனடி ஆற்றல் தேவைப்பட்டால் கரும்பு ஜூஸ் அருந்தலாம். உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க விரும்பினால் இளநீர் சிறந்த தேர்வாகும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது, ஏனெனில் அது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். கரும்பு ஜூஸில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், அதை மிதமாக மட்டுமே அருந்த வேண்டும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தொழிலாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் 11 இடங்களில் சதம் அடித்த கோடை வெயில்!

பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 15% கூடுதலாக பெய்துள்ள கோடை மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!


















