இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 26.03.2026

- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச் செல்வோர் மருத்துவக் காரணங்களுக்காக கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும். பணத்திற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் மற்றும் சமூகவலைதளம் வழியாக்க் கூட காண்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- HBO தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ஹாரி பாட்டர் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. மொத்தமுள்ள 7 புத்தகங்களும் ஒவ்வொரு சீசனாக உருவாகி வரும் நிலையில் தொடரின் ட்ரெய்லர் மார்ச் 25 வெளியானது.
- குஜராத் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் மசோதா நிறைவேற்றம். இதன்மூலம் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றம் லிவ்-இன் உறவுகள் ஆகியவற்றிற்கு மதம் கடந்த பொதுவான விதிகள் அமல்படத்தப்பட உள்ளன. இச்“சட்டம் பழங்குடியினருக்கு பொருந்தாது என தெரிவிப்ப.
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மார்ச் 30 மற்றும் ஏப்.2, 4, 6ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: kர்ச் 31 ஏப்ரல்1,3,5 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால் 4 நாட்களில் மன தாக்கல் முடிந்து விடும்.தலைமைத் தேர்தல் அதிகாரி
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.70 உயர்ந்த கிராம் ரூ.13670க்கும் சவரன் ரூ.109.360க்கும் விற்பனை ஆகிறது.இன்றைய
- இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.260க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.260000க்கும் விற்பனை ஆகிறது.
- ஹார்மோஸ் நீரிணை வழியாகச் செல்லும் அணைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை தயாரித்தது ஈரான் அரச்சு.
- உலகப்போரின் முடியும் வரை தினமும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை அகிம்சை வழியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டவர் ரூ.50,000 அபராதம் செலுத்த ஐகோர்ட் மதுரை அமர்வு உத்தரவு
- உடலை வைத்து போராட்டம் நடத்துவது பேஷனாக உள்ளது… * உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல… *:உடலுக்கு கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கு செய்யப்பட வேண்டியது அடிப்படை உரிமையாகும்… ஐகோர்ட் மதுரை அமர்வு கருத்து..
- நாடு முழுவதுமுள்ள NAYARA பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.5.30 டீசல் ரூ.3 விலை உயர்வு இன்று முதல்.


