Connect with us

இந்தியா

எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக் கடன் கிடையாது தெரியுமா?

Published

on

ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு போயிருந்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லை. இருந்த கூட்டமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வங்கியின் மேலாலருக்கும் நகைக் கடன் வாங்க வந்த ஒரு சம்சாரிக்குமான உரையாடல். எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக் கடன் கிடையாதாம்.

“இங்க கேளுங்க சார் உங்கள் வங்கியில்தான் இத்தனை வருஷமாக கணக்கு வைத்து வரவு செலவு வைத்திருக்கிறேன்.நகைக்கடன் இல்லை என்றால் எப்படி”

“எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கியோட உத்திரவு நான் நினைச்சாலும் கொடுக்க முடியாது.உங்கள் ஆதார் கார்டில் பிறந்த தேதி இருக்கிறது.கம்யூட்டர்‌ நிராகரிக்கும்”

“காரணம் என்னனு சொல்லுங்க சார்.என்னோட நகை.கணக்கு இதே வங்கியில் இருக்கு.வங்கியின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் நகைக் கடன் கேட்கேன். எத்தனை ப்ரசண்ட் லெஸ் பண்ணனுமோ பண்ணிக்கோங்க”

“காரணத்தையெல்லாம் யாருய்யா சொல்றா. ஆர்டர் வருது அதன்படிதான் நாங்க நடக்கணும். என்ன எதுக்குன்னு கேட்க முடியாது”

“எழுபது வயதாகிருச்சு செத்துப் போயிருவார்னு நெனைக்கீங்க. அப்பிடிதானே சார்”

“காரணம் தெரியலய்யா”

“வேறு என்ன காரணம் இருக்க முடியும். நகைக்கடன் வாங்கிட்டுப் போன முப்பது நாப்பது வயசுக்காரங்க செத்துப் போனா என்ன செய்வீங்க. கடனை தள்ளுபடி பண்ணிட்டு நகைகளை குடுத்திருவீகளா. டெத் சர்ட்பிகேட் வாரிசு சர்ட்பிகேட் தோளாந்துருத்திய வாங்கிக்கிட்டு வட்டியும் முதலும் வாங்கிக்கிட்டு தான நகைகளை குடுக்குறீங்க .அது மாதிரிதான எழுபது வயசுக்காரன் செத்தாலும்”

வங்கியின் மேலாளர் பதில் சொல்ல இயலாமல் மௌனமாகிவிட்டார். சம்சாரி புலம்புகிறார்.

“எல்லாம் என்ன காரணம்னா கந்து வட்டிக்காரன் கிட்ட போ அடகுக் கடைக்குப் போ அநியாய வட்டி கட்டி சாகு. போர்டு மட்டும் மூலை மூலைக்கு விளம்பரம். “இது உங்கள் வங்கி.உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வங்கி”

அந்த சம்சாரி கோபத்துடனும் வருத்தத்துடனும்‌ வெளியே போகிறார். வங்கிகளில் எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக் கடன் கிடையாது என்கிற விஷயம்‌ எனக்கு இன்றைக்குக் தான் தெரிந்தது.

குறிப்பு: ரிசர்வ் வங்கி இந்த உத்திரவை உடனே திரும்ப பெற வேண்டும். நகைக்கடன் பெறுவதற்கு என்ன வயது வரம்பு. இரண்டு லட்ச ரூபாய் பெறுமானம் உள்ள நகைக்கு ஒன்றரை லட்சம் தானே கடன் தருகிறீர்கள்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா14 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

Translate »
Take auctions with you wherever you go. If the vehicle is going to a dealership or collision center, confirm where the vehicle should be left and whether keys are needed.. run emigration 2026 | sportsam events.