இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.02.2026

- தமிழ்நாடு அரசின் 2016 முதல் 2022 ம் ஆண்டுகளுக்கான திரைப்படம் மற்றும் சின்னத் திரைக்கான சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கான விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- சேலம் சீலநாய்க்கன்பட்டியில் நேற்று நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் புலம் பெயர் தொழிலாளி சூரஜ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது மனைவிக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 கிடைத்தது.
- வங்கதேச தேர்தலில் பிஎன்பி கட்சி அமோக வெற்றி. – பேகம் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான் புதிய பிரதமராகிறார்.
- தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – 4 மாநகராட்சி மற்றும் 65 நார்ட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜகவுக்கு பின்னடைவ.
- 2016 முதல் 2024 வரை நீதிபதிகள் மீது இதுவரை 8600 புகார்கள் வரப்பெற்றுள்ளன என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
- டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு ரத்து தொடர்பாக 4 அலுவலர்கள் சஸ்பெண்ட்.
- நாடுமுழுதும் 12300 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
- தாய்மை செயலி என்ற புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பதிவு, பேறுகால பரிசோதனைகள், பிரசவம், பிரசவத்துக்குப் பிந்தைய பராமரிப்பு, குழந்தை வளர்ச்சி மற்றம் தடுப்புசி தவணைகள் ஆகியவை இந்த செயலியின் மூலம் கண்காணிக்கப்படும்.


