இந்தியா
10 மாத பெண் குழந்தையின் உடல் ஊறுப்புக்கள் தானம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் அவரது மனைவி ஷெரின் மற்றும் 10 மாத குழந்தை ஆலின் ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி 3 பேரும் படுகாயமடைந்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை ஆலின் மூளைச்சாவு அடைந்தது. மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று குழந்தை ஆலினின் சில உடல் உறுப்புக்களை தானமாகக் கொடுக்க குழந்தையின் பெற்றோர் முன்வந்தனர். அதன்படி இறந்த குழந்தையின் உடலிலிருந்து சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய வால்வு ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவ மனையிலுள்ள குழந்தைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று பொருத்தப் பட்டது.
மிக இளம் வயதில் அதாவது பிறந்து 10 மாதங்களே ஆன இந்த குழந்தை ஆலின்தான் மிகவும் வயது குறைந்த நன்கொடையாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


