இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 22.01.2026

- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து கிராம் ரூ.14200க்கும் சவரன் ரூ.113600க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.340க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.340000க்கும் விற்பனை ஆகிறது.
- வெறும் 56 மணி நேரத்தில் 16 சீன ராணுவ சரக்கு விமானங்கள் ஈரானில் தரையிறங்கியுள்ளன.
- பூந்தமல்லி-வடபழனி இடையே பிப்ரவரியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது.
- நாமக்கல்-கூலி உயர்வுப் பிரச்னையால் சில்லறை விற்பனையில் கறிக்கோழி விலை கிலோ ரூ.380 ஆக உயர்ந்துள்ளது.
- சென்னை விழுப்புரம் தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிக்கன் குனியா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில பொது சுகாதாரத் துறை அறிவிப்பு
- தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை அணைத்து வகை தரிசனக் கட்டணங்களும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் 7007 கிராம ஊராட்சிகளை சுத்தமான குடிநீர்-சுகாதாரமான ஊராட்சி என அறிவிக்க திட்டம்.


