இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 21.01.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.350 உயர்ந்து கிராம் ரூ.14250க்கும் சவரன் ரூ.114000க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலையில் மாற்றமில்லை. கிராம் ரூ.340… ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.340000
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மயிலாடுதுறை மீனவர்களை 2 நாட்டுப்படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது
- மூட்டுவலி காரணமாக பேட்மிண்டன் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சாய்னா நேவால்.
- மதுரை எல்ஐசி அலுவலகத்தில் டிசம்பர் 17ல் நடந்த தீவிபத்தில் உயிர்இழந்த பெண் அதிகாரியை தீயிட்டு கொளுத்தி கொலை செய்ததாக சக அலுவலர் ராம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- யுடியுப் பார்த்து எடையை குறைக்க நாட்டுமருந்து கடையில் வெங்காரம் வாங்கி சாப்பிட்ட மாணவி ரத்த வாந்தி வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
- அமெரிக்கா கிரீன்லாந்து மீது காட்டும் அக்கறையால் டென்மார்க் அரசு கிரீன்லாந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியது. எந்த நேரமும் போருக்கு தயாராக இருங்கள் என கிரீன்லாந்து மக்களுக்கு அந்நாட்டின் அதிபர் வேண்டுகோள்
- அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஆட்டம் கண்ட பங்குச் சந்தைகள் – ஒரே நாளில் 10 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.
- ஜெருசலேமில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இடித்து தரை மட்டமாக்கியது இஸ்ரேல்.
- போர்களை நிறுத்தத் தவறிய ஐ.நா.சபைக்கு பதிலாக ”போர்டு ஆஃப் பீஸ்” என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளார் டிரம்ப். இந்த பதிய அமைப்பில் ரூ.9000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- இந்திய பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுகளில் டீகோ கார்சியாவை மட்டும் வைத்துக்கொண்டு பிற பகுதிகளை மொரீஷியஸ் வசம் ஒப்படைக்கும் இங்கிலாந்தின் திட்டம் முட்டாள்தனமானது என டிரம்ப் பேச்சு.


