வணிகம்
டிசம்பர் 7க்குள் பயணிகளுக்கு பணத்தை திருப்பி தர இண்டிகோவுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு!
Published
11 மாதங்கள் agoon
By
Poovizhi
புதுடில்லி: புதிய விமானப்பணி விதிகள், பணியாளர்களின் பணிநேர வரம்புகள் போன்ற மாற்றங்களின் காரணமாக இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் டிசம்பர் 7, இரவு 8 மணிக்குள் பயணிகளுக்கு முழு பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப நாட்களில், விதிமுறை மாற்றங்களால் இண்டிகோ நிறுவனத்தின் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமடைந்த நிலையில், இண்டிகோ நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியது.
DGCA புதுவிதிகளை தற்காலிகமாகத் திரும்ப பெற்றிருந்தாலும், இன்றும் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சகம் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியதாவது:
தற்போதைய விமான கட்டண உயர்விலிருந்து பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவசர பயணிகளுக்காகக் கடுமையான கட்டண வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டண மீறல்கள் எதுவானாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்,
“டிசம்பர் 7, 2025 இரவு 8 மணிக்குள் அனைத்து பாதிக்கப்பட்ட பயணிகளின் பணமும் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.
மறு அட்டவணை கட்டணங்களை தேவையின்றி வசூலிக்கக்கூடாது”
என்று இண்டிகோவுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ரத்து செய்யப்பட்ட பயணிகளின் சரக்குகள் 48 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என்றும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவனம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இண்டிகோ நிறுவனம் தனது எக்ஸ் பதிவில்,
“டிசம்பர் 5 முதல் 15 வரை பயணம் செய்ய இருந்த முன்பதிவுகளுக்கான ரத்துசெய்தல்/மறு அட்டவணை கோரிக்கைகள் அனைத்துக்கும் முழு விலக்கு அளிக்கப்படும். பணம் தானாகவே திருப்பி வழங்கப்படும்”
என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

சென்னையில் இன்று 41 IndiGo விமானங்கள் ரத்து – 8வது நாளாக தொடரும் ரத்து குழப்பம்

இண்டிகோ விமான சேவையில் பெரிய குழப்பம்: பிப்ரவரி 10க்குள் சீராகும் என அறிவிப்பு

அடுத்தடுத்த சலுகை அறிவிப்புகள்: ரூ.1199க்கு விமான பயணம்.. முழு விபரங்கள்..!

மார்ச் மாதம் வரை விமான சேவை ரத்து: அதிரடி அறிவிப்பு!

விமானம் ரத்தாகிவிட்டதா? கவலை வேண்டாம்.. பிளான்-பி அறிவித்த இண்டிகோ!

எங்க வேணாலும் போகலாம்… வெறும் ரூ. 915- இண்டிகோ விமான நிறுவனம் சூப்பர் ஆஃபர்!





