Connect with us

உலகம்

டிரம்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்ட உண்மையான காரணம் வெளிச்சம்!

Published

on

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு பெறாததற்கான உண்மையான காரணம் தற்போது வெளிச்சம் பார்த்துள்ளது.

சமீப நாட்களில் உலகளவில் பேசப்பட்ட முக்கியமான விவகாரம் டிரம்ப் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பற்றியதாகும். தனது ஆட்சிக் காலத்தில் ஏழு போர்களை நிறுத்தியதாகக் கூறிய டிரம்ப், “அமைதிக்கான நோபல் பரிசு எனக்கே வழங்கப்பட வேண்டும்” என்று பலமுறை வலியுறுத்தியிருந்தார். மேலும், தன்னைப் புறக்கணித்தால் அது அமெரிக்காவை அவமதிப்பதாகக் கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் அறிவிக்கப்பட்ட இந்தாண்டு நோபல் அமைதிக்கான பரிசு, வெனிசுலாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இதனால் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், டிரம்புக்கு பரிசு வழங்கப்படாததற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. நோபல் பரிசு பரிந்துரைக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 1 ஆகும். ஆனால், டிரம்பின் பெயர் அந்த தேதிக்கு பிந்தைய நாளில், அதாவது பிப்ரவரி 1க்கு பிறகே பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அவரது பெயர் பரிசு பட்டியலில் இடம்பெறாமல் போன முக்கிய காரணமாகும்.

நார்வே நோபல் குழுவின் உறுப்பினரான ஜோர்கன் வாட்னே பிரிட்னெஸ் கூறியதாவது:
“நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பரிந்துரைகள், கடிதங்கள் பெறுகிறோம். எங்கள் முடிவுகள் அனைத்தும் ஆல்பிரட் நோபலின் கொள்கைகளையும், அவரின் விருப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. வெளிப்புற அழுத்தங்கள் அல்லது ஊடகச் செல்வாக்குகள் எதுவும் எங்கள் தீர்மானத்தை பாதிக்காது,” என அவர் கூறினார்.

மேலும், ஹென்றி ஜாக்சன் சொசைட்டி நிறுவனத்தின் வரலாற்றாசிரியரும் ஆராய்ச்சியாளருமான தியோ ஜெனூ கூறுகையில்,
“டிரம்பின் முயற்சிகள் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்குமா என்பதை நிரூபிக்க முடியவில்லை. குறுகிய காலத்தில் மோதல்களை நிறுத்துவது, அமைதிக்கான அடிப்படை காரணங்களை தீர்ப்பது ஆகியவற்றுக்கு இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது,” என்றார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
me profile.