Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய தகவல்: விடுபட்ட பெண்களுக்கு இந்த முறை ரூ.1000 உறுதி – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியான பெண்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றால், உடனடியாக விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் சக்கரபாணி பேசிய போது, இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்த தகுதியான பெண்களுக்கு இந்த முறை நிச்சயம் ரூ.1000 வழங்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, இந்த திட்டத்தை அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதங்களில் விரிவாக்க திட்டம் வகுத்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, புதிதாக விண்ணப்பிக்கும் பெண்களின் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 45வது நாளில் தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதிபட கூறியுள்ளார்.

அதனால், தகுதியானவர்கள் உங்கள் பகுதியில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கலந்து கொண்டு, உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

✅ முக்கிய குறிப்புகள்:

  • 1000 ரூபாய் பெற தகுதியான பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

  • 45 நாட்களில் மனுவுக்கு பதில் வரும்.

  • அரசு விதிமுறைகள் பூர்த்தி செய்தவர்களுக்கே உதவி.

Translate »
tassen met gepersonaliseerde logo opdruk.