Connect with us

வணிகம்

8வது சம்பளக் குழு: ஊதிய நிலைகள் இணைந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் பெரும் நன்மைகள்!

Published

on

8வது சம்பளக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்காக உருவாகும் புதிய சம்பள கட்டமைப்பின் முக்கிய மாற்றங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பளக் குழு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சுமார் 50 லட்சம் ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.

இம்முறை முக்கிய கவனம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மட்டுமல்லாமல், ஊதிய நிலைகளின் இணைப்பு என்பதிலுமாக இருக்கிறது. தற்போதுள்ள 6 ஊதிய நிலைகளை 3 முக்கிய நிலைகளாக இணைக்கும் திட்டம் அரசாங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது.

 இதன் முக்கிய நன்மைகள்:

  • அடிப்படை சம்பளத்தில் நேரடி உயர்வு: இரண்டு நிலைகள் இணைக்கப்படும்போது, புதிய நிலையின் ஆரம்ப சம்பளம் அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

    உதாரணமாக: நிலை 1 (₹18,000) + நிலை 2 (₹19,900) → புதிய நிலை: ₹19,900 அல்லது அதற்கு மேல்.

  • பதவி உயர்வு விரைவாக கிடைக்கும்: சிறிய நிலைகளைத் தாண்டி நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. புதிய ஒருங்கிணைந்த நிலைகள் மூலம் முன்னேற்றம் சுலபமாகும்.

 யார் அதிகம் பயனடைவார்கள்?

தற்போதைய நிலை-1, நிலை-3 மற்றும் நிலை-5 ஊழியர்கள் இந்த இணைப்பு மூலம் அதிக நன்மை பெறக்கூடியவர்கள். அவர்களது சம்பளமும், பதவியும் விரைவில் உயர வாய்ப்பு உள்ளது.

 இதன் முக்கிய நோக்கம்:

  • அடித்தட்டில் உள்ள ஊழியர்களின் சம்பள வேறுபாட்டை குறைத்து, தொழில்முறை வளர்ச்சிக்கான நேரத்தை சுருக்குதல்.

  • மத்திய அரசு ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் “மாஸ்டர் ஸ்ட்ரோக்” எனப் பார்க்கப்படுகிறது.

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..