Connect with us

வணிகம்

தமிழக அரசின் TABCEDCO திட்டத்தில் ரூ.1.20 லட்சம் கடன் – கறவை மாடு வாங்க விருப்பமா? இங்கே முழு விவரம்!

Published

on

TABCEDCO துவக்கிய புதிய வாய்ப்பு – பால் பண்ணை தொடங்க கறவை மாடுகளுக்கு ரூ.1.20 லட்சம் கடன்!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO), பால் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இந்நூல்திட்டத்தின் கீழ் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 வரை கடன் பெறலாம்.

முக்கிய அம்சங்கள்:

  • திட்டம் வழங்குபவர்கள்: TABCEDCO, AAVIN / மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம்

  • கடன் தொகை: ஒரு மாடுக்கு ₹60,000, அதிகபட்சம் 2 மாடுகள் – ₹1,20,000 வரை

  • கடன் திருப்பிச் செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்

  • வட்டி விகிதம்: வருடத்திற்கு 7% (பயனாளி பங்கு 5% மட்டுமே)

தகுதி விவரங்கள்:

  • வயது வரம்பு: 18 முதல் 60 வயது வரை

  • வருமான வரம்பு: ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்

  • மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஆகியிருக்க வேண்டும்

  • ஒரு குடும்பத்திலிருந்து ஒருவருக்கே கடன் வழங்கப்படும்

தேவையான ஆவணங்கள்:

  • சாதி சான்றிதழ்

  • வருமானச் சான்றிதழ்

  • பிறப்பிடச் சான்றிதழ்

  • பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் சான்று

விண்ணப்பிக்கும் முறை:

  • பயனாளிகள் தங்கள் மாவட்ட ஆவின் சங்கத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்

  • சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..