செய்திகள்
மனைவியை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய கணவன்!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே மனைவியை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய கணவன்
பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் 3 வயது குழந்தை படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்
விளாங்குப்பத்தை சேர்ந்த ராஜா – மனைவி சின்ன பாப்பா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
சின்ன பாப்பாவுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க வலியுறுத்தி ராஜா தகராறு செய்து வந்துள்ளார்
தனது மகள் வீட்டிற்கு சென்ற சின்ன பாப்பாவை கொலை செய்யும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார் ராஜா
பெட்ரோல் குண்டு வெடித்ததில், சின்ன பாப்பாவின் 3 வயது பேத்தி ஆஷிகா படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






