தமிழ்நாடு
உடலுறவின்போது உடைந்த ஆண்குறி: தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு!

உடலுறவின் போது ஆண் குறி உடைந்து விட்டதை அடுத்து தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் சென்னையில் தங்கி பழைய இரும்புகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் 20 வயது பெண் ஒருவருக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் தம்பதிகள் மதுரவாயில் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென இந்த தம்பதியின் வீடு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் அடைந்து கதவை தட்டினார்கள். ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை என்பதால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.
தனை அடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்கொலைக்கு முன்னர் தம்பதிகள் இருவரும் சேர்ந்து எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் உடலுறவின் போது ஆண்குறி நரம்பு உடைந்து போனதால் எங்களால் குழந்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் எங்கள் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இருவரும் கையெழுத்திட்டனர்.
மனைவியுடன் உடலுறவு கொண்டபோது கணவரின் ஆண் குறி நரம்பு உடைந்து விட்டதால் அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனையை அணுகி தகுந்த சிகிச்சை செய்யாமல் அவர்களாகவே குழந்தை பிறக்காது என்று முடிவுசெய்து மன உளைச்சலில் இந்த திடுக்கிடும் முடிவை எடுத்துள்ளனர். திருமணமான 5 மாதத்தில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.