தொழில்நுட்பம்
ஓட்டுநர் உரிமம் தேவையில்லா மின்சார ஸ்கூட்டர் – ஜெலியோ லிட்டில் கிரேசி அறிமுகம்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
ஓட்டுநர் உரிமம் தேவையில்லா மின்சார ஸ்கூட்டர் – ஜெலியோ லிட்டில் கிரேசி அறிமுகம்!
மின்சார வாகன தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான Zelio E Mobility, டீனேஜ் ரைடர்களுக்காக “லிட்டில் கிரேசி” மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த வேக மின்சார வாகனமாக, ஓட்டுநர் உரிமம் தேவையில்லாமல் இயக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக 10 முதல் 18 வயது வரையிலான இளம் பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் பயண தீர்வாக இது அமைகிறது.
Zelio Little Crazy மாடல்களின் சிறப்பம்சங்கள்:
மூன்று பேட்டரி வகைகள்:
48V/32AH லீட்-ஆசிட் பேட்டரி – ₹49,500 (55-60 கிமீ ரேஞ்ச், 7-8 மணி நேர சார்ஜிங்).
60V/32AH லீட்-ஆசிட் பேட்டரி – ₹52,000 (70 கிமீ ரேஞ்ச், 7-9 மணி நேர சார்ஜிங்).
60V/30AH லித்தியம்-அயன் பேட்டரி – ₹58,000 (70-75 கிமீ ரேஞ்ச், 8-9 மணி நேர சார்ஜிங்).
மொட்டார்: 48/60V BLDC மோட்டார் (அதிகபட்ச வேகம் 25 கிமீ/மணி).
எடை: 80 கிலோ (அதிகபட்ச சுமைத்திறன் 150 கிலோ).
மின்சார செலவு: ஒரு முழு சார்ஜுக்கு 1.5 யூனிட் மின்சாரம் மட்டுமே.
அதிரடி அம்சங்கள்:
டிஜிட்டல் மீட்டர்
USB சார்ஜிங் போர்ட்
கீலெஸ் டிரைவ்
திருட்டு எதிர்ப்பு அலாரம்
ரிவர்ஸ் கியர், பார்க்கிங் சுவிட்ச், ஆட்டோ-ரிப்பேர் வசதி
ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் & டிரம் பிரேக்குகள்
Zelio லிட்டில் கிரேசி ஸ்கூட்டர் இளஞ்சிவப்பு, பழுப்பு/கிரீம், வெள்ளை/நீலம், மஞ்சள்/பச்சை ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. நிறுவனம் மோட்டார், கட்டுப்படுத்தி மற்றும் சட்டகத்துக்கு இரண்டு வருட உத்தரவாதம் வழங்குகிறது. 2025க்குள் 1,000 டீலர்ஷிப் தளங்களை உருவாக்கும் திட்டத்துடன் Zelio E Mobility, இந்தியாவில் தனது விற்பனையை விரிவுபடுத்துகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

சென்னையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வெடித்து சிதறி தீப்பிடித்த மின்சார ஸ்கூட்டர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 5 பேர்!

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கத் தடை.. அதிர்ச்சியில் நிறுவனங்கள்!

மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடையா?

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: முன்பதிவு ஆரம்பம் என தகவல்




