தொழில்நுட்பம்
ஏப்ரல் 30ல் இந்தியா வரவிருக்கும் லம்போர்கினி டெமராரியோ சூப்பர்கார் – விலை, சிறப்பம்சங்கள் இதோ!

ஏப்ரல் 30ஆம் தேதி, உலகப் புகழ்பெற்ற இத்தாலிய கார் நிறுவனமான லம்போர்கினி, தங்களது புதிய ஹைபிரிட் சூப்பர்காரான ‘டெமராரியோ’வை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
முன்பு மிகவும் பிரபலம் பெற்ற ஹூராகேன் மாடலுக்கு மாற்றாக, இந்த டெமராரியோ மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்டில் உலகளவில் அறிமுகமானது. தற்போது இந்திய சந்தைக்கு இக்கார் தயாராக இருக்கிறது.
டெமராரியோவின் சிறப்பம்சங்கள்:
4.0 லிட்டர் V8 ட்வின்-டர்போ இன்ஜின்
மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஹைபிரிட் பவர்ட்ரெயின்
மொத்தமாக 907 ஹார்ஸ் பவர், 730 Nm டார்க்
8 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்
வேகமும் வலிமையும் நிறைந்த சூப்பர்கார்:
0-100 கிமீ வேகத்தை 2.7 விநாடிகளில் எட்டும் திறன்
அதிகபட்ச வேகம் – மணிக்கு 343 கிமீ
4 வீல் டிரைவ் வசதி: V8 இன்ஜின் பின்பக்க வீல்களுக்கு, எலெக்ட்ரிக் மோட்டார் முன்பக்க வீல்களுக்கு பவர் அனுப்புகிறது
ஹைபிரிட் தொழில்நுட்பம்:
3.8 kWh பேட்டரி பேக் – 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்
7kW AC சார்ஜர் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மூலம் சார்ஜ்
முழுமையான எலெக்ட்ரிக் மோடில் ஃபிரண்ட் வீல் டிரைவ் வசதியுடன் பயணம் செய்யும் திறன்
விலை எதிர்பார்ப்பு:
முந்தைய ஹூராகேன் மாடல் ₹3 கோடி முதல் ₹5 கோடி வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. புதிய டெமராரியோ, அதைவிட உயர்ந்த விலையில் வெளியாகும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவின் ஹைபிரிட் சூப்பர்கார் சந்தையில் புதிய அத்தியாயத்தை தொடக்கவுள்ள டெமராரியோ மாடல், வெறும் வேகத்திற்காக அல்ல, புத்துணர்ச்சியான டெஸைனும், பசுமை தொழில்நுட்பமும் கொண்டதாக இருக்கும்!








