தமிழ்நாடு
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வீல் சேரில் வந்து வாக்களித்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுவென நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 11-ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 95 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வத்துடன் வக்களித்து வருகின்றனர். முக்கிய கட்சியான திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் நின்று 20 நிமிடம் வெயிலில் காத்திருந்து வாக்களித்தார். இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வீல் சேரில் வந்து வாக்களித்தார்.




















