சினிமா செய்திகள்
பிளாக் ஹோல் புகைப்படத்தையும் விட்டு வைக்காத நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜாஃபர்ஸ்ட்லுக்!

சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பு படமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதல் படமாக வெளியான கனா படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அடுத்ததாக, யூடியூபில் கலக்கி வரும் பிளாக்ஷிப் டீமை கொண்டு விஜய் டிவி புகழ் ரியோவை ஹீரோவாக வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படத்தை பிளாக்ஷிப் டீமின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், நாயகன் ரியோ மற்றும் நாயகனின் நண்பன் ஆர்.ஜே. விக்னேஷ் காந்த் இடம்பெற்றுள்ளனர்.
டிவி மீடியாக்களில் நடைபெறும் விவாதங்களை ட்ரோல் செய்யும் விதமாக பிரேக்கிங் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
ஆர்.ஜே. விக்னேஷ் காந்த் டிசர்ட்டில் பிளாக் ஹோல் புகைப்படமும் மெது வடை புகைப்படத்தையும் வைத்து செம கலாய் செய்துள்ளனர்.






















