சினிமா செய்திகள்
தளபதி 63-ல் இணைந்த பிரபல பேச்சாளர்!

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள தளபதி 63 படம் வரும் தீபாவளிக்கு வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யுடன் வில்லு படத்திற்கு பிறகு நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தில், இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராப், யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளன.

மேலும், ஷாருக்கான் ஸ்பெஷல் ரோலில் நடிக்க உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், பிரபல் பேச்சாளர் கு. ஞானசம்பந்தன் தளபதி 63ல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசம்பந்தம் இதற்கு முன்னர், எஸ்.எம்.எஸ், இதயத் திருடன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும், எத்தனை பிரபலங்கள் தளபதி 63ல் இணைய உள்ளார்களோ என ரசிகர்கள் எதிர்பார்ப்பு தினந்தோறும் எகிறி வருகிறது.



















