இந்தியா
28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்ட 70 வயது மாமனார்.. வைரல் புகைப்படம்!

மருமகள் என்பவர் இன்னொரு மகள் என்று இந்தியர்கள் கருதி வரும் நிலையில் சொந்த மருமகளை திருமணம் செய்த மாமனாரால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கோராக்பூர் என்ற பகுதியில் கைலாஷ் யாதவ் என்ற 70 வயது நபரின் மகன் திடீரென உடல் நல குறைவால் காலமாகிவிட்டார். இதனை அடுத்து அவரது 28 வயது மருமகள் விதவையாக இருந்ததால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென 28 வயதே ஆன மருமகள் பூஜாவை 70 வயது மாமனார் கைலாஷ் யாதவ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்த தகவல் உற்றார் உறவினர் நண்பர்கள் யாருக்கும் தெரியாத நிலையில் ஒரே ஒரு நண்பரின் முன்னிலையில் மட்டும் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த நண்பர் தனது சமூக வலைதளத்தில் மாமனார் – மருமகள் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டவுடன் தான் பெரிய பூகம்பம் வெடித்தது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கைலாஷ் யாதவ் வீட்டு மின் திரண்டு மகள் போல் இருக்கும் மருமகளை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என வாக்குவாதம் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கைலாஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி பூஜாவிடம் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பூஜாவின் சம்மதத்தின் பேரில் தான் திருமணம் நடந்தது என்பது தெரிய வந்தது.
கைலாஷ் யாதவ் 12 ஆண்டுகளுக்கு முன்னால் தனது மனைவியை இழந்த நிலையில் மகன் மருமகளுடன் இருந்த நிலையில் மகனும் இறந்து விட்டதால் இருவரும் இணைய முடிவு செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இருவருடைய சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடந்துள்ளதால் சட்டப்படி எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி திரும்பி விட்டனர்.
சொந்த மருமகளையே மனைவியாகிக் கொண்ட 70 வயது மாமனாரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.