இந்தியா
இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி.. பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களின் நிலை அம்போ..

பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவில் இருந்ததை அடுத்து இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்திய பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதால் கடந்த புதன்கிழமையும் இன்றும் ஏற்பட்ட சரிவின் காரணமாக முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளனர். குறிப்பாக அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பின் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது. இன்று சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்து அதன் பின் கடைசியாக 875 புள்ளிகள் சரிவில் பங்குச்சந்தை சென்செக்ஸ் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

#image_title
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பெர்க் அறிக்கைக்கு பின்னர் தான் பங்குச்சந்தையில் 85% வங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள், அந்நிறுவனத்திற்கு கடன் அளித்த வங்கிகளின் பங்குகள் ஆகியவை படு வீழ்ச்சி அடைந்துள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இன்று கிட்டத்தட்ட 59 ஆயிரத்துக்கு சென்செக்ஸ் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 17,600 என்ற புள்ளிகளாக குறைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் என்ன நிலை இருந்ததோ அந்த நிலைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச் சந்தையில் மிகவும் முக்கிய வர்த்தகமாக கருதப்படும் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மட்டும் நான்கு சதவீதம் சரிந்ததால் அதில் முதலீடு செய்தவர்களின் நிலை அம்போ என ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாகவும் இதில் பெரும்பாலும் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதானி குழுமத்திற்கு 4500 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பாக அதானி என்டர்பிரைசஸ், அதானி வில்மர், அதானி கேஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றின் பங்குகள் மட்டும் 5 முதல் 25 சதவீதம் வீழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் நிலை திண்டாட்டம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் மற்றும் அந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்து வங்கிகளின் பங்குகளை வைத்துள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு பெரிய நஷ்டம் இல்லை என்றும் அப்படியே அவர்களுக்கு சிறு நஷ்டம் ஏற்பட்டாலும் அவை விரைவில் மீட்டு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதானி குடும்பத்திற்கு எஸ்பிஐ வங்கி தான் 40 சதவீத கடன் கொடுத்துள்ளன அதேபோல் ஒரு சில தனியார் வங்கிகளும் அதிக அளவு கடன் கொடுத்திருந்ததை அடுத்து எஸ்பிஐ உள்பட வங்கிகளின் பங்குகள் வைத்திருந்தவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பேங்க் நிஃப்டி இன்று ஒரே நாளில் 1300 புள்ளிகளில் இறங்கி உள்ளதை அடுத்து அந்த துறை எந்த அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.