Connect with us

இந்தியா

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

Published

on

உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய கோடீஸ்வரர்களின் அடுத்த தலைமுறையினர் தங்களது நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதும் இதன் காரணமாக அடுத்த தலைமுறையினர் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதிகம் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய கோடீஸ்வரர்களின் வாரிசுகளான ஏழு பேர் அடுத்த சில ஆண்டுகளில் உலக அளவில் ஜொலிக்க உள்ளார்கள். அவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

#image_title

அனன்யா பிர்லா: பாடகி மற்றும் ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் நிறுவனர்: குமார் மங்கலம் பிர்லாவின் மூத்த மகள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மையில் பட்டம் பெற்றவர்

#image_title

ஆதார் பூனவல்லா: சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவின் சி.இ.ஓ. இவர் சைரஸ் பூனவல்லாவின் மகன். இவரது தலைமையின் கீழ், இந்தியாவின் சீரம் நிறுவனம் உலகளவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா: எச்.சி.எல் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ. தனது தந்தையின் சாம்ராஜ்யத்தில் சேருவதற்கு முன்பு வடமேற்கு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு படித்தார். இப்போது, அவர் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை இவர் வைத்திருக்கின்றார். மேலும் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராக பணியாற்றுகிறார்.

ஆகாஷ் அம்பானி: ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்லின் தலைவர், முகேஷ் அம்பானியின் மூத்த மகன். பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர்.

அஷ்னி பியானி: ஃபியூச்சர் குழுமத்தின் உரிமையாளரான கிஷோர் பியானியின் மகள் ஆவார். ஃபியூச்சர் குழுமத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைன் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் டெக்ஸ்டைல் டிசைனிங் படித்தார்

ரிஷாத் பிரேம்ஜி: விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவர். கோடீஸ்வரர் அசிம் பிரேம்ஜியின் மகன். இவரது தலைமையின் கீழ், விப்ரோ தொழில்நுட்ப நிறுவனங்கள் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருகின்றது.

இஷா அம்பானி பிரமல்: ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் உளவியலில் மேஜர் படிப்பு படித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?