Connect with us

இந்தியா

இந்தியாவில் 6ஜி சேவை விரைவில் அறிமுகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

6ஜி சேவை

6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில், பல துறை அமைச்சகங்கள், துறைகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய அமைப்புகள் மற்றும் தொழில் துறையினர் ஆகியோர் இணைந்து 6ஜி தொழில்நுட்ப புத்தாக்க குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்து உள்ளது.

தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஏற்றுமதி

டெல்லியில் இருக்கும் விக்யான் பவனில் நேற்று, பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டு, சர்வதேச தொலைத்தொடர்பு பகுதி அலுவலகம், 6ஜி ஆராய்ச்சி மேம்பாடு சோதனை அமைப்பு மற்றும் புத்தாக்க மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, 5ஜி தொழில்நுபட்பத்தை அதிவேகமாக அறிமுகப்படுத்தியுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 5ஜி அறிமுகமான 120 நாட்களிலேயே சுமார் 125 நகரங்களுக்கு இந்த சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

5ஜி ஆய்வகங்கள்

4ஜி தொழில்நுட்பத்திற்கு முன்னர், தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடாக மட்டுமே இருந்த இந்தியா, இப்போது தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்தியா 100 5ஜி ஆய்வகங்களை அமைக்கும்.

நகரத்தை விடவும் கிராமங்களில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 5ஜி அறிமுகமான சில நாட்களிலேயே 6ஜி குறித்து நாங்கள் பேசி வருகிறோம். இது இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?