இந்தியா
இங்கிலாந்திலிருந்து வந்த 250 பேர் எங்கு என்றே தெரியவில்லை.. அதிர்ச்சியில் கர்நாடகா!
இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதிய கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இங்கிலாந்தில் வந்த ஒருவருக்கு புதிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து கர்நாடகா வந்த 250 பயணிகளைக் கண்டறிய முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 250 பயணிகளையும் கண்டறிய வேண்டும் என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தடை மீண்டும் நீட்டிக்கப்படும், ஆனால் நீண்ட நாட்கள் இருக்காது என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


















