இந்தியா
H3N2 காய்ச்சலுக்கு 2 பேர் பலி, 90 பேர் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் திடீரென H3N2 வகை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று இல்லாமல் எல்லோருக்கும் பரவலாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த காய்ச்சலால் இந்தியாவில் 2 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

#image_title
H3N2 என்னும் இந்த ஃப்ளூ காய்ச்சல் கடந்த 2-3 மாதங்களாக இது பரவி வருகிறது.
இது வைரஸ் என்பதால் ஆண்டிபயாடிக் இதற்கு எதிராக வேலை செய்யாது. அதே நேரம் இது கொரோனாவும் கிடையாது. இந்நிலையில் இந்த காய்ச்சல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது.
H3N2 காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் போதுமானது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
கொரோனாவை போல் வேகமாக பரவும் இந்த H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் தற்போது. ஹரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.