இந்தியா
மட்டன் டெலிவரி செய்ய மாட்டேன் என கூறிய ஸ்விக்கி ஊழியர்.. வேலை பறிபோனாலும் விருது கிடைத்ததால் மகிழ்ச்சி..!

அனுமன் கோவில் வளாகத்தில் வசித்து வந்த வாடிக்கையாளர் ஒருவர் மட்டன் உணவு ஆர்டர் செய்ததை அடுத்து அனுமன் கோயிலுக்குள் வந்து மட்டனை டெலிவரி செய்ய மாட்டேன் என்று கூறிய ஸ்விக்கி ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு அனுமன் கோயில் நிர்வாகிகள் விருது கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் மட்டன் உணவு ஆர்டர் செய்யப்பட்டதை அடுத்து அந்த உணவை டெலிவரி செய்வதற்காக சென்றார். அப்போது அவர் அந்த உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளர் அனுமன் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதை பார்த்தார். அனுமன் கோவிலுக்கு சென்று தான் அந்த உணவை டெலிவரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதை அடுத்து கொண்டு கோயிலுக்குள் செல்ல தயங்கினார்.
அதனை அடுத்து அவர் தனது வாடிக்கையாளருக்கு தொலைபேசி மூலம் போன் செய்து உங்கள் வீடு அனுமான் கோவில் வளாகத்தில் இருப்பதால் மட்டன் உணவை என்னால் டெலிவரி செய்ய முடியாது என்று கூறினார். இதனை அடுத்து வாடிக்கையாளர் ஸ்விக்கி நிர்வாகத்திற்கு புகார் அளிக்க ஸ்விக்கி நிர்வாகம் இதனை விசாரணை செய்து அந்த நபரை பணியில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து டெலிவரி நபர் சமூக வலைதளத்தில் இது குறித்து வீடியோ வெளியிட்டதை அடுத்து அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் ஒரு அனுமார் பக்தர் என்றும் அனுமன் கோயில் வளாகத்திற்கு தன்னால் இறைச்சியை கொண்டு செல்ல முடியாது என்றும் இந்த வேலை இல்லாவிட்டால் நாளை எனக்கு வேறு வேலை கிடைக்கும் என்றும் ஆனால் எனக்கு மதமும் கொள்கையும் முக்கியம் என்றும் என் குடும்பத்திற்கு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சனாதன தர்மத்தை பின்பற்றும் என் சகோதரர்களை என்னால் ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கோவிலின் வளாகத்துக்கு சென்று மட்டன் உணவை டெலிவரி செய்ய வேண்டும் என எனக்கு மேல் அதிகாரிகள் உத்தரவிட்டனர் என்றும் ஆனாலும் தன்னுடைய வேலை போனாலும் பரவாயில்லை அதை செய்ய முடியாது என்று தான் பிடிவாதமாக இருந்ததை அடுத்து தன்னுடைய வேலை பறிக்கப்பட்டது என்றும் அதற்காக நான் கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தினசரி அனுமன் கோவிலுக்கு சென்று அனுமன் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவன் என்றும் அந்த இடத்தில் இறைச்சியை என்னால் கொண்டு செல்ல முடியாது என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ மிகப்பெரிய வைரலானதை அடுத்து அனுமன் கோவில் நிர்வாகிகள் அவரை அழைத்து விருது கொடுத்து கௌரவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.