Connect with us

சினிமா செய்திகள்

15 வயதில் மும்பையில் சொந்த வீடு வாங்கிய சிறுமி.. எப்படி தெரியுமா?

Published

on

சொந்த வீடு வாங்குவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு கனவாக இருக்கும் என்பதும் குறிப்பாக மும்பையில் சொந்த வீடு வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு இயலாத ஒன்று என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையில் 15 வயது சிறுமி ஒருவர் சொந்த வீடு வாங்கியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகையான ருஹானிகா தவான் சமீபத்தில் தனது சொந்த வீட்டை வாங்கி விட்டதாக கூறி அவர் தன் கையில் சாவி வைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: என் இதயம் தற்போது நிறைந்துள்ளது. நான் மிகவும் நன்றி உடையவராக இருக்கிறேன். சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற மிகப்பெரிய கனவை நான் நிறைவேற்றியுள்ளேன். இது எனக்கும் என்னுடைய பெற்றோருக்கும் மிகப்பெரிய விஷயம்.

ருஹானிகா தவான் மைனராக இருப்பதால் சொந்த வீடு வாங்குவது தொடர்பான ஆவணங்களில் அவரது பெயருக்கு பதிலாக அவரது பெற்றோர்கள் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மைல்கல்லை அடைய உதவிய எனக்கு வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ருஹானிகா தவான் தாயார் தனது மகள் குறித்து கூறிய போது எனது மகள் எங்களை நேசிக்கும் ஒரு சிறந்த நபர். அவருக்கு தன் வருமானத்தை சேமித்து அதில் வீடு வாங்கியுள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். அவர் தனது வாழ்க்கை மற்றும் தொழில் குறித்த நம்பிக்கையுடன் இருந்ததால்தான் இந்த வயதிலேயே அவர் சொந்த வீடு வாங்கியுள்ளார். இது ஆரம்பம்தான், நாங்கள் ஏற்கனவே பெரிய பெரிய கனவு கண்டு வருகிறோம், அந்த கனவுகளை நிறைவேற்ற அவர் இன்னும் கடுமையாக உழைப்பார் என்று தெரிவித்துள்ளார்.

சல்மான்கான் நடித்த ’ஜெய் ஹோ’ என்ற திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் 15 வயது சிறுமி ருஹானிகா தவான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இது யூடியூப் சேனல் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார் என்பதும், அதில் சுமார் 80 ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

அவர் தொடர்ந்து தனது வாழ்க்கை முறை வீடியோக்கள், பல பிராண்டுகளை அறிமுகப்படுத்தும் விளம்பரங்கள் ஆகியவற்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகிறார். ருஹானிகா தவானுக்கு இன்ஸ்டாகிராம் பயனர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 15 வயதில் சொந்தவீடு வாங்கிய உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், எப்போதும் இதேபோல் சந்தோசமாக இருங்கள் என அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகையாக இருந்து 15 வயதில் மும்பையில் சொந்த வீடு வாங்கியுள்ள ருஹானிகா தவானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?