இந்தியா
ரூ.65,000 கோடிக்கு சொந்தக்காரர் வாங்கிய விலையுயர்ந்த அபார்ட்மெண்ட்; எத்தனை கோடி மதிப்பு தெரியுமா?

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் 65,000 கோடி சொத்து வைத்திருக்கும் நிலையில் அவர் இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பை வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பில் 65 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான நிராஜ் பஜாஜ் அவர்கள் வாங்கியுள்ளார். ஆசிய பணக்காரர்களில் ஒருவராகிய நிராஜ் பஜாஜ், ராகுல் பஜாஜின் மகன் என்பதும் பஜாஜ் குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களை அவர் தற்போது முன் நின்று வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த குழுவின் தலைவராக மாறிய அவர் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கலின் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பஜாஜ் அலையன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் உள்ளார் என்பதும் நிராஜ் பஜாஜ் தற்போது 65 வயதிற்கு மேல் இருக்கும் நிலையில் அவருக்கு 35 வருட கார்ப்பரேட் அனுபவம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபராக மட்டும் இன்றி டேபிள் டென்னிஸ் வீரராகவும் இருக்கும் மிராஜ் பஜாஜ் 1970 மற்றும் 77 ஆண்டுகளில் இந்தியாவுக்காக டேபிள் டென்னிஸ் விளையாடினார் என்பதும் இந்தியாவின் முன்னணி டேபிள் டென்ன்ஸ் வீரராக அவர் நான்கு முறை தேர்வு செய்யப்பட்டார் என்பதும் மூன்று முறை தேசிய சாம்பிளாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான அர்ஜுனா விருதையும் அவர் பெற்றுள்ளார்.
மிராஜ் பஜாஜ் மினல் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் இருவருமே அமெரிக்காவில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிராஜ் பஜாஜ் தற்போது இந்தியாவின் விலை மிகவும் விலை உயர்ந்த குடியிருப்பில் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பில் ரூ.252 கோடிக்கு வாங்கி உள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவின் விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராக தேர்வு பெற்றுள்ளார்.
கடந்த மாதம் வெஸ்பன் குடும்பத்தைச் சேர்ந்த கோயல் என்பவர் 240 கோடிக்கு மும்பையில் பிளாட் ஒன்றை வாங்கிய நிலையில் அவர்தான் அதிக மதிப்புள்ள குடியிருப்பை வாங்கிய தொழிலதிபர் என்ற பெருமை கிடைத்தது. இந்த பெருமையை ஒரே மாதத்தில் நிராஜ் பஜாஜ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தெற்கு மும்பையில் உள்ள வால்கேஷ்வர் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் மூன்று தளங்களில் நீரஜ் பஜாஜ் அவர்களின் பிளாட் அமைந்துள்ளது. இந்த பிளாட்டின் பரப்பளவு 18,000 சதுர அடி என்றும் இதன் விலை ஒரு சதுர மீட்டருக்கு 1.4 லட்சம் என்றும் கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தின் 29 வது 30வது மற்றும் 31வது தளங்களை நிராஜ் வாங்கி உள்ளதாகவும் இதற்காக அவர் 252 கோடி செலவு செய்திருப்பதாகவும் பத்திர செலவு மட்டுமே ரூபாய் 15 கோடி என்றும் கூறப்படுகிறது.
50 ஆண்டு பழமையான இரண்டு மாடி வீட்டில் வசித்து வரும் நிலையில் அந்த கட்டிடத்தில் நவீன வசதிகள் இல்லை என்பதால் அவர் தற்போது புதிய குடியிருப்பை வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.