சினிமா
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!

2022ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், 2023ம் ஆண்டு ஆரம்பமாகி உள்ளது. கடந்த ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் ஆரம்பிக்கலாமா என வசூல் வேட்டையை ஆரம்பித்து ரஜினிகாந்த், விஜய், அஜித்தின் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் பின்னுக்குத்தள்ளி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார்.
இந்நிலையில், 2023ம் ஆண்டை கிக் ஸ்டார்ட் செய்து இந்தியன் 2, மணிரத்னம் படம் அடுத்து ராஜமெளலி படம், விக்ரம் 3 என வரிசையாக பல பிளாக்பஸ்டர் ப்ராஜெக்ட்களை கையில் வைத்துள்ள கமல்ஹாசன் புத்தாண்டை முன்னிட்டு செம கூலான ஒரு போஸை வெளியிட்டு இருந்தார்.
புத்தாண்டாக இருந்தாலும் ரசிகர்களின் போட்டி சூழல் கொஞ்சம் கூட மாறாது என்பதற்கு ஏற்ற வகையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் கமல்ஹாசனை போஸை போட்டோ மீமாக மாற்றி கலாய்த்து வருகின்றனர்.
விஜய் அஜித் இடையே இந்த ஆண்டு எந்தளவுக்கு போட்டி பொங்கலுக்கு நிலவி வருகிறதோ அதை விட அதிகமான போட்டி ஜெயிலர் மற்றும் இந்தியன் 2 படங்கள் மூலம் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இடையேயும் இன்னமும் இப்படியொரு மாஸ் கிளாஷ் நடைபெற்று வருவது வேறலெவல் விஷயம் என தமிழ் சினிமா ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.