தமிழ்நாடு
13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது இளைஞர்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த 13 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த 30 வயதான சுபின் என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
களியக்காவிளை அருகே செங்கல் பகுதியை சேர்ந்த சுபின் என்பவர் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது மாணவியுடன் காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளை பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மாணவியை சிற்றார் வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று சுபின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அந்த மாணவி தனது வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார். ஆசிரியை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதில் மாணவி பாலியல் பலாத்காராம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, சுபின் மீது பாறசாலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான சுபினை போலீசார் தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


















