இந்தியா
10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமான மகாராஷ்டிராவில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா அதிகரிப்பு காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்களில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் தான் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் மாணவர்களின் நலன் கருதி மகாராஷ்டிரா அரசு எடுத்த இந்த முடிவு சரியானது என்று அம்மாநில கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


















