இந்தியா
இரவு நேரச் செய்திகள் – 19.11.2026

- ஒரு காலத்தில் வெள்ளித் துகள்கள் கலந்த திரவமான கொலாய்டல் சில்வர், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.650-க்கும் மேற்பட்ட நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது என்றும், இதன் பயன்பாட்டால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும் தகவல்கள் பகிரப்படுகின்றன. மருத்துவத் துறையில் புதிய சிகிச்சை முறைகள் உருவாகத் தொடங்கியபோது, கொலாய்டல் சில்வரின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதை நிரூபிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சையாகவோ, பாதுகாப்பான இயற்கை மருந்தாகவோ கருதக்கூடாது.
- கரூர் வழக்கில் விரைவில் சிபிஐ குற்றப்பத்திரிகை! விசாரணைக்கு அழைக்கப்பட்ட பல முக்கிய நபர்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- GTA 6 வெளியானதையொட்டி அமெரிக்காவில் விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை 9% – 20% கூடியுள்ளதாக BAMBOO HR நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் பலர் முன்கூட்டியே விண்ணப்பிக்காமல் SICK லீவ் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏ க்களின் எண்ணிக்கை 109ல் இருந்து 1-8 ஆக குறைந்த்து. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு. விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், திருச்சி கிழக்கு தொகுதிகளை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியும் காலியானது.
- கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நவம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை. அதனை ஈடுசெய்ய டிசம்பர் 5ம் தேதி பணி நாளாக அறிவித்து ஆட்சியர் உத்தரவு.
- விண்வெளி மற்றும் காலவெளி (Space-Time) முழுவதும் பயணிக்கும் மிகப்பெரிய அதிர்வுகளான Gravitational Waves (ஈர்ப்பு அலைகள்) இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இந்த அலைகள், தொலைதூர அண்டங்களில் ஒன்றையொன்று சுற்றி வரும் எண்ணற்ற மிகப்பெரிய கருந்துளைகளால் (Supermassive Black Holes) உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- *முதுமலை மற்றும் கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வாகனத்தில் சவாரி சென்ற அமைச்சர் வன்னியரசு,காட்டு யானைக்கு மிக அருகில் சென்றது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது*





