இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.03.2026

- காற்றாலை மின் உற்பத்தி சாதனங்கள் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு-7.5% மகாராஷ்டிரா – 5.8% குஜராத்- 2.1% புதுச்சேரி -1.89% மற்ற அனைத்து மாநிலங்களிலும் 1 சதவீதத்திற்கும் கீழே உள்ளது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரி விக்ரம்.கே.துரைசாமி சீனாவுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494-ன் கீழ் இருதார திருமண குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமானால், இரண்டாவது திருமணம் நடந்ததற்கான சரியான ஆதாரங்கள், சடங்குகள், தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் இருக்க வேண்டும். இரண்டாவது திருமணத்திற்கு ஆதாரமில்லை என்பதால் 73 வயது முதியவர் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமில்லை: 66 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது குற்றமாகாது எனக்கூறி 73 வயது முதியவர் மீதான வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- அரசு போக்குவரத்துக் கழகம், மின்வாரியம், போக்குவரத்துக் காவல், சிறைத்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களும் தபால் வாக்கு செலுத்தலாம். – தேர்தல் ஆணையம் உத்தரவு.
- இன்று தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.400 குறைந்து கிராம் ரூ.13900க்கும் சவரன் ரூ111200க்கும் விற்பனை ஆனது.










