இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.01.2026

- ஆதாரில் மொபைல் எண்ணை எந்த நேரத்திலும் அப்டேட் செய்து கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்தது UIDAI
- காஞ்சிபுரம் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரச்னையை தீர்க்க முன்னால் நீதிபதி எஸ்.கே.கவுலை நடுவராக நியமித்தது உச்ச நீதிமன்றம்.
- காலையில் சவரனுக்கு ரூ.2960 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.2240 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.124880க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.15610க்கு விற்பனை.
- தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பிப்ரவரி 4 மற்றும் 5 தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.
- இந்தியர் இல்லை என்பதால் 17 ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியரை பணிநீக்கம் செய்த எஸ்பிஐ வங்கியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மனுதாரர் பணியில் சேரும்போது இலங்கை அகதி என்பதை மறைக்கவில்லை என்பதால் ஏற்கமுடியாது என்று கூறி உத்தரவிட்டார்.
- இந்தியாவின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயிலில் சைவ உணவுகள் மட்டுமே இருப்பதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் ஒரு வாரத்தில் இறைச்சி உணவுகளானது ரயிலின் மெனுவில் சேர்க்கப்படும் என கிழக்கு ரயில்வே தகவல்.


