Connect with us

இந்தியா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தின் இன்றைய சில சுவாரசிய தகவல்கள்

Published

on

திமுக வேட்பாளர்கள் பட்டியல் 164 பேர் கொண்ட பட்டியல் இன்று மாலை மு.க.ஸ்டாலின் அவர்கள்  வெளியிட்டார்.

காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் காங்கிரஸ் இடையே 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி.

அவினாசி (தனி) சட்டமன்றத் தொகுதியில் தி.மு.கழக வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள பெண் மருத்துவர் கோகிலாமணிக்கு வயது 28. தி.மு.கழக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 165 வேட்பாளர்களில் மிக இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்..

திமுக வேட்பாளர் அறிவிப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 4 அமைச்சர்கள் – பத்மநாபபுரம் தொகுதி-மனோ தங்கராஜ், தாராபுரம் தொகுதி-கயல்விழி செல்வராஜ், ராணிப்பேட்டை  தொகுதி-ஆர்.காந்தி-இவருக்கு பதில் இவரது மகன் வினோத் காந்தி, திருக்கோவிலூர் தொகுதி-பொன்முடிக்கு  பதில் அவரது மகன் கவுதம சிகாமணி. வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் போட்டியிடுபவர்களில் பெண்கள் 18 பேர், முனைவர் 7 பேர், சட்டம் படித்தவர்கள்-29 பேர், மருத்துவர்கள்-15 பேர், பட்டம் பெற்றவர்கள்-125 பேர்.

கரூர் தொகுதி செந்தில் பாலாஜி 2026ல் கோவை தெற்கில் போட்டி.

திமுகவில் அண்மையில் இணைந்த முன்னால் முதலமைச்சர் ஓபிஎஸ் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியும் கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும் மீண்டும் போட்டி.

வரும் சட்டமன்ற தேர்தலில் 139 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடிப் போட்டியில் இருக்கின்றன.

18 தொகுதிகளில் திமுக-பாஜக நேரடி போட்டி.

திமுகவின் தேர்தல் அறிக்கையை நாளை மார்ச் 29 மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

எழும்பூர் தொகுதியில் பிரசன்னா போட்டியிடுகிறார். மதுரை மேற்கில் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து புதிய நீதிக்கட்சி வேட்பாளர் இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி. போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த நடிகர் போஸ்வெங்கட் மற்றும் சத்யராஜ் மகள் திவ்யா ஆகியோருக்கு எந்த தொகுதியும் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு எடப்பாடி நெருக்கடி கொடுப்பதாக தகவல்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Campus talk zone. Programs usa top. indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online the indian navy is recruiting for the post of senior ….