இந்தியா
,இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 16.02.2026

- 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வரும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்படும். – தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக்.
- ஊட்டி பைகாரா ஏரியில் விரைவில் மின்சார படகுகள் சேவை தொடங்க உள்ளதாக சுற்றுலாத் துறை உயர்நீதிமன்றத்தில் உ றுதி அளித்து உள்ளது.
- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து கிராம் ரூ.14440க்கும் சவரன் ரூ.115520க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.15 குறைந்து கிரம் ரூ.265க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.265000க்கும் விற்பனை ஆகிறது.
- நாடு முழுதும் 8000 மையங்களில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தீர்ப்ப கூறியதாக நீதிபதி மீது அரிவாள் வீசிய பாலமுருகன் என்பவர் கைது.
- டெல்லியில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரான்ஸ், பிரேசில் அதிபர்கள் மற்றும் சுந்தர் பிச்சை, பில்கேட்ஸ் உள்ளிட்ட 40 சி.இ.ஓ.க்கள் பங்கேற்பு.


