இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 26.01.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.275 உயர்ந்து கிராம் ரூ.15025க்கும் சவரன் ரூ.120200க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.375க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.375000க்கும் விற்பனை ஆகிறது.
- வரி ஏய்ப்பு புகாரை அடுத்து நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.532 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் இருப்பதாக வேலம்மாள் கல்விக்குழுமம் ஒப்புக்கொண்டது.
- நாட்டின் 77வது குடியரசு தினவிழா டெல்லியிலும் சென்னையிலும் இன்று கோலாகலக் கெண்டாட்டம். டெல்லியில் குடியரசுத் தலைவரும் சென்னையில் ஆளுநரும் கொடி ஏற்றினர்.
- குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசும் திமுக தோழமைக் கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன.
- மின்வாரிய அலுவலகங்களில் ரூ.2ஆயிரம் வரை ரொக்கமாக மின்கட்டணம் வசூலிக்கப்படும். அதற்குமேல் ஆன்லைன் கட்டண முறையில்தான் பணம் கட்ட இயலும்.
- ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் நிலையங்களை மேம்படுத்தி இரண்டாவது முணையம் உருவாக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை.
- ஜனவரி 27 மற்றும் 28ல் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாடு (TNWESSafe ) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஐநா பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி உட்பட 500 வெளிநாட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு. 11 பொருள்கள் குறித்து கருத்தரங்கு நடைபெறும்.
- தஞ்சை செங்கிபட்டியில் “வெல்லும் தமிழ் பெண்கள்“ டெல்டா மகளிர் மாநாடு முதலமைச்சர் தலைமையில் னந்று நடைபெறுகிறது.


