இந்தியா
77வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுதும் களைகட்டின.

இந்திய தாய்த்திரு நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி டெல்லி கடமை பாதையில் இன்று காலை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 77வது குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நாட்டின் உயரிய விருதான அசோக் சக்ரா விருது விண்வெளி வீரர் சுபான்ஷூசுக்லாவுக்கு வழங்கப்பட்டது.
பத்மபூஷண் விருதுகள் மலையாள நடிகர் மம்மூட்டி முன்னால் ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரன் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி மற்றும் ராணுவ அதிகாரி வி.கே.மல்ஹோத்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பத்மவபூஷன் விருதுகள் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோல் மறைந்த முன்னால் கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பத்மஸ்ரீ விருதுகள் பெற்றவர்கள்
- திருத்தணி ஓதுவார் சுவாமிநாதன்
- நீலகிரி குறும்பா ஓவியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி
- தஞ்சாவூர் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி
- முன்னால் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா
- திருவாரூர் மிருதங்க வித்வான் பக்தவச்சலம்
- வெண்கல சிற்பி ராஜ காளியப்ப கவுண்டர்
- சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி
- புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல்
- எழுத்தாளர் சிவசங்கரி
- நடிகர் மாதவன்
- ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார்
- வேளாண் பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தர் ராமசாமி
ஜீவன் ரக்ஷா விருதுகள் 30 பேருக்கு வழங்கப்பட்டன.
இவ்விழாவில் முதன்முறையாக பாக்டீரியன் ஒட்டகங்கள் பங்கேற்றன. கருங்கழுகுகள் ராணுவத்தில் பயன்படும் குதிரைகள் ஆகியவையும் பங்கேற்றன.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த அலங்கார ஊர்தியும் பங்கேற்றது.
சீருடைப் பணியாளர்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சுயசார்பு இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் பங்கேற்றது.









