இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 18.01.2026

- டெல்லியில் காற்று மாசு தொடர்பான நோய்களால் 2024ம் ஆண்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக டெல்லி மாநில அரசு அறிக்கை
- மும்பையிலிருந்து பெங்களுருக்கு வெறும் 18 மணி நேரத்தில் பயணம் செய்ய புதிய துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகமாகிறது. பயணக்கட்டணம் 3-ஏசி வகுப்பில் ரூ.2500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பீகாரில் தயயாரிக்கப்பட்டு விற்பனையாகிவரும் அல்மாண்ட் கிட் சிரப் எனும் சளி இருமலுக்கான மருந்தை தெலுங்கானாவைத் தொடர்ந்து தமிழ்நாடும் தடை செய்துள்ளது. இதில் உள்ள எதிலீன் கிளைகால் என்ற நச்சு வேதிப்பொருளால் உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை
- காற்றின் தரத்தை அறிந்துகொள்ள சென்னை நகரின் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் ரூ.6.36 கோடியில் அமைக்கப்படும் – மாநகராட்சி நிர்வாகம்
- தை அமாவாசையை முன்னிட்டு நீர்நிலை பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வழிபாடு
- சாகித்ய அகாடமியின் வருடாந்திர விருது வழங்கும் விழாவை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தி விட்ட நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தேசீய அளவில் தலா ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
- முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் வங்காள மொழிகளின் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி தேர்வுக்குழுக்கள் அமைக்கப்படும்.
- நாளைய சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும்பொருட்டு இன்றே தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார் விஜய்.
- ஜனவரி 21 முதல் பிப்ரவரி 1 வரை புதுச்சேரியில் காங்சிரஸ் மேற்கொள்ள உள்ள நடைபயண திட்டத்திற்கு ராகுல்காந்தி அழைக்கப்பட்டுள்ளார். – மல்லிகார்ஜீன கார்கே
- டிசம்பரில் ஏற்பட்ட பெரும் விமானப் போக்குவரத்து இடையுறுகளுக்கு காரணமான இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம் விதித்தது இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம்
- சிறந்த மாடுபிடி வீரருக்கு கால்நடை பராமரிப்புத்துளையில் முன்னுரிமை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு











