இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.04.2026

- வளைகுடா நாட்டில் நிலவும் போர் சூழல் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கோவில்பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளை வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட உற்பத்தியாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இந்தத் திடீர் ஆலை மூடலால், நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞர்னேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 மக்களவை மற்றும் 63 மாநிலங்களவை எம்பிக்கள் கையெழுத்திட்ட பதவி நீக்க தீர்மானத்தை எந்த காரணமும் கூறப்படாமல் இரு அவைத் தலைவர்களும் நிராகரித்தனர்.
- ஆண்டுக்கு 3 முறை ஜனவரி, மே மற்றும் செப்டம்பரில் நடைபெற்று வந்த பட்டயக் கணக்காளர் Chartered Accountant இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறையாக மே மற்றும் நவம்பரில் மட்டுமே நடைபெறும் என்று ஐசிஏஐ அறிவிப்பு
- இருவரும் மூச்சத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம“ ஏங்குகிறது. – கமல்காசன் எம்பி.
- ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி பிரமாணப் பத்திரத்தில் பொய்யான தகவல்களை அளித்துள்ளதாகக் கூறி தங்களிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறி வழங்க வந்த இரண்டு நபர்களை தேர்தல் அலுவலர்கள் முன்னிலையிலேயே அதிமுகவினர் தாக்கியதை அடுத்து தேர்தல் ஆணையமே கே.சி.விரமணி மீது புகார் அளித்து வழக்க பதிவு செய்தது.
- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து கிராம் ரூ.13860க்கும் சவரன் ரூ.110880க்கும் விற்பனை ஆகிறது.
- பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். – மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்
- தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7600 வேட்பு மனுக்களும் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. ஆண்கள் 6095 பேரும் பெண்கள் 1356 பேரும் மாற்றுப் பாலினத்தவர் 3 பேரம் பேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
- புலம்பெயர் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளது.
- கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று பிற்பகலில் முடிவடைய உள்ளது.













