Connect with us

ஆரோக்கியம்

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

Published

on

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

கல்லீரல் (Liver) என்பது மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. உணவைச் செரிமானம் செய்ய உதவுவது, நச்சுப் பொருட்களை நீக்குவது, உடலுக்குத் தேவையான சத்துகளை சேமித்து பயன்படுத்துவது, ரத்தம் உறைய உதவும் புரதங்களை உருவாக்குவது என 500-க்கும் மேற்பட்ட முக்கிய பணிகளை கல்லீரல் மேற்கொள்கிறது. எனவே, கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், அதன் தாக்கம் முழு உடலிலும் வெளிப்படும்.

ஹெப்படைடிஸ் என்றால் என்ன?

ஹெப்படைடிஸ் (Hepatitis) என்பது கல்லீரலில் ஏற்படும் அழற்சி. இது பெரும்பாலும் ஹெப்படைடிஸ் A, B, C, D, E போன்ற வைரஸ்களால் ஏற்படுகிறது. குறிப்பாக ஹெப்படைடிஸ் B மற்றும் C நீண்டகால கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் சுருக்கம் (Cirrhosis), கல்லீரல் புற்றுநோய் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

பொதுவான அறிகுறிகள்

காய்ச்சல், கடும் சோர்வு, பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் எடை குறைதல், தசை பலவீனம், கருமையான சிறுநீர், கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறுதல் (மஞ்சள் காமாலை)

ஏன் உணவு மிகவும் முக்கியம்?

ஹெப்படைடிஸ் உள்ளவர்களுக்கு பசியின்மை, வாந்தி, குமட்டல் போன்ற காரணங்களால் போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். இதனால் உடல் பலவீனம் அதிகரித்து, குணமடையும் காலம் நீளும்.

எனவே, சரியான உணவுமுறையே சிகிச்சையின் முக்கிய பகுதியாகும்.

என்ன மாதிரியான உணவு சாப்பிட வேண்டும்?

  1. போதுமான கலோரி மற்றும் கார்போஹைட்ரேட்

உடலுக்கு தேவையான சக்தி கிடைக்க தினசரி போதுமான கலோரிகள் அவசியம்.

சாப்பிட ஏற்றவை:

அரிசி கஞ்சி, இட்லி, இடியாப்பம், பொங்கல், மசித்த சாதம், தானியக் கஞ்சி, மிதமான ரசம், காய்கறி சூப்.

  1. நல்ல தரமான புரதம்

புரதம் கல்லீரல் செல்கள் மீண்டும் உருவாக உதவுகிறது. உடல் தசைகள் சிதைவதைத் தடுக்கிறது.

சாப்பிட ஏற்றவை:

பருப்பு வகைகள், பாசிப்பருப்பு, முட்டை, சிறிய மீன்கள், குறைந்த கொழுப்பு பால் மற்றும் பால் பொருட்கள்

புரதத்தின் அளவு நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி இருக்க வேண்டும்.

  1. கொழுப்பு குறைவாக இருக்க வேண்டும்

கல்லீரல் பாதிப்பின் போது அதிக கொழுப்புள்ள உணவுகள் செரிமானத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

.வைட்டமின்களும் தாது உப்புகளும்

ஹெப்படைடிஸ் உள்ளவர்களுக்கு வைட்டமின் A, D, E, K, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B12 குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

சாப்பிட வேண்டியவை:

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள், பச்சைக் கீரைகள், முளைகட்டிய பருப்பு, முழுத் தானியங்கள், குறைந்த கொழுப்பு பால் பொருட்கள், இரும்புச் சத்து மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக் கூடாது.

உணவு முறையில் கவனிக்க வேண்டியவை

ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட வேண்டாம்.

தினமும் 6–7 சிறிய வேளை உணவுகள் எடுத்துக்கொள்ளுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தினசரி சேர்க்கவும்.

பூண்டில் உள்ள இயற்கைச் சேர்மங்கள் கல்லீரல் அழற்சியைக் குறைக்க உதவக்கூடும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, மருத்துவர் அனுமதித்தால் தினசரி உணவில் அளவோடு சேர்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள்,  பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக மசாலா, இனிப்பு, குளிர்பானங்கள், சாக்லேட், அதிக காபி, டீ, தரமற்ற எண்ணெய்கள், மதுபானம், புகையிலை, போதைப் பொருட்கள், சுத்தமில்லாத குடிநீர், நெய், வனஸ்பதி, அதிக கொழுப்புள்ள இறைச்சி.  தேவைப்பட்டால் குறைந்த அளவில் தாவர எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்தலாம்

நினைவில் கொள்ளுங்கள்

ஹெப்படைடிஸ் நோயிலிருந்து விரைவில் குணமடைவதற்கு மருந்துகள் மட்டும் போதாது.

சரியான உணவுமுறை, போதுமான ஓய்வு, மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சையை முறையாகப் பின்பற்றுதல், மதுபானம் மற்றும் புகையிலையை முழுமையாகத் தவிர்த்தல்

இவை அனைத்தும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க மிகவும் அவசியம்.

ஆரோக்கியமான உணவே கல்லீரலுக்கு சிறந்த மருந்து!

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்7 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky. Blog – coaching wien | tobias judmaier, msc. Sonic racing crossworlds : can local split screen players join an online lobby together, or is it offline only split screen ?.