இந்தியா
ZyCoV-D கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? விலை நிலவரம் என்ன?

ZyCoV-D கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும் என ஜைடஸ் காடிலா நிர்வாக இயக்குனர் ஷார்வில் படேல் தெரிவித்துள்ளார்.
ZyCoV-D கொரோனா தடுப்பூசி விலை என்ன என்று கேட்ட போது இன்னும் ஓர் இரு வாரத்தில் அறிவிக்கப்படும். அக்டோபர் மாதம் முதல் மாதத்திற்கு 1 கோடி ZyCoV-D கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும். அதுவே ஜனவரி மாதம் முதல் மாதத்துக்கு 5 கோடியாக உற்பத்தி அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசி ZyCoV-D-ஐ அவசர பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசி மூன்று கட்டங்களாகச் சோதனை செய்யப்பட்டதில் 66.6 சதவீதம் அளவில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா எதிராகப் போராட அனுமதிக்கப்பட்ட 6வது தடுப்பூசி ZyCoV-D ஆகும்.
இந்த ZyCoV-D தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஜைடஸ் காடில்லா நிறுவனம் இந்திய மருத்துவத் துறையுடன் இணைந்த ZyCoV-D-ஐ தயாரித்துள்ளது.















