சினிமா செய்திகள்
யாஷின் பான் – இந்தியா திரைப்படம் ’கே.ஜி.எஃப் 2’ டிரைலர்!

2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ’கே.ஜி.எஃப் 2’என்பதும் இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த டிரைலர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
’கே.ஜி.எஃப் 2’ படம் முழுவதும் ஆக்ஷன் மற்றும் அதிரடி வன்முறை காட்சிகள் உள்ளது என்பது இந்த மூன்று நிமிட டிரைலரில் இருந்து தெரியவருகிறது. மொத்தத்தில் முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.