Connect with us

தமிழ்நாடு

முடிவுக்கு வருகிறது வொர்க் ஃப்ரம் ஹோம்: முன்னணி நிறுவனங்கள் அதிரடி!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வொர்க் ஃப்ரம் ஹோம் அமலில் வந்த நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணி செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் கிட்டதட்ட 50 சதவீத பொதுமக்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அப்படியே பாதிப்பு ஏற்பட்டாலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறையில் பணி செய்துகொண்ட ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவின்கேர் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் செலவுகள் மீதமானதை கணக்கில் கொண்டு நிரந்தரமாகவே சில ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பல நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை பணிக்கு வரவழைக்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ ஏற்கனவே 55 சதவீத பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டு இருப்பதால் விரைவில் முழுமையாக அலுவலகம் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதேபோல் இன்ஃபோசிஸ் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களை அலுவலகம் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

2025ம் ஆண்டு வரை வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நிலைப்பாட்டை எடுத்த டிசிஎஸ் நிறுவனம், தற்போது அந்த நிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் பணியாளர்களை அலுவலத்திற்கு வரவழைக்க ஏற்பாடு செய்து வருகிறது. 90 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட காரணத்தினால் தற்போது 50 சதவீதத்தினர் அலுவலகம் வர தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 70 முதல் 80 சதவீதம் டிசிஎஸ் பணியாளர்கள் அலுவலகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து இருப்பது, மூன்றாம் அலையின் அறிகுறி இல்லாமல் இருப்பது ஆகியவை காரணமாக பல நிறுவனங்கள் தற்போது பணியாளர்களை வரவழைக்க தொடங்கிவிட்டார்கள். எனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வொர்க் ஃப்ரம் ஹோம் இந்தியாவில் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Waco temple killeen.