உலகம்
வேலைநீக்க நடவடிக்கை இல்லை.. ஆனாலும் அதிர்ச்சி அடைந்த ஆப்பிள் ஊழியர்கள்!

வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும் சில முக்கிய அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் கூகுள் உள்பட பல நிறுவனங்களில் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தங்களிடம் பணி புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபோதிலும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை வேலை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனி மேலும் வேலை மிக்க நடவடிக்கை இருக்காது என்றும் அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் சில சலுகைகளை ரத்து செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுவரை வீட்டில் இருந்து வேலை செய்து கொண்ட ஊழியர்கள் பிப்ரவரி மாதம் முதல் கண்டிப்பாக அலுவலகன் வர வேண்டும் என்றும் அலுவலகம் வரும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் காலவரையற்ற விடுமுறை எடுக்கப்படும் சலுகைகளையும் ரத்து செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் டுவிட்டரில் கூறிய போது ஆப்பிள் நிறுவனம் அதன் கோவிட் 19 கொள்கையில் சில மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி இனிமேல் அலுவலகத்திற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு எடுக்க அனுமதிக்கப்படும் விடுமுறையையும் ரத்து செய்யப்படுகிறது. இதனால் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் இனிமேல் காலவரையற்ற விடுமுறை எடுக்க முடியாது என்பது குறிப்பிடப்பட்டது.
மேலும் கொரோனா உள்ளிட்ட எந்த வகை நோயாக இருந்தாலும் எடுக்கக்கூடிய சிறப்பு விடுமுறை வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ரத்து செய்யப்படுவதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே நோய்வாய் பட்ட போது அதிகபட்சமாக ஐந்து நாட்கள் மட்டுமே இனி விடுமுறை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திவிட்டதை அடுத்து கடந்த இரண்டு வருடங்கள் ஆக தொலைதூரத்தில் இருந்து வேலை செய்து வந்தவர்கள் இனி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஆப்பிள் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திலும் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தும் பணி செய்து கொண்டிருந்த நிலையில் இனி தினமும் அலுவலகம் சென்று பணி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.