வணிகம்
அட்சய திருதியைக்கு பிறகு தங்கம் விலை குறையும் வாய்ப்பு இருக்கா? – வியாபாரிகள் சங்கம் விளக்கம்!

அட்சய திருதியை முடிந்தது… இனி தங்கம் விலை குறையும் வாய்ப்பு உள்ளதா? – ஜெயந்திலால் தகவல்!
அட்சய திருதியையொட்டி, தங்கம் விலை சுமார் ரூ.71,840 ஆக உயன்றிருந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் தங்கவாங்கும் ஆர்வத்தில் சிறிதும் குறைவே காணப்படவில்லை. சென்னையில் இருந்து கோவை வரை நகைக்கடைகளில் மக்கள் காலை முதலே கூடி தங்களுக்கு விருப்பமான நகைகளை வாங்கினர்.
அட்சி திருதியை அன்று, தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையால் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினர். பெரும்பாலான கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டு, சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றது.
ஒரு சவரன் தங்கம் ரூ.71,840 ஆகவும், ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும் விற்பனையானது. கடந்த ஆண்டு அதே நாளில் ஒரு சவரன் ரூ.53,640 என்ற விலையில்தான் இருந்தது. ஆனாலும், இந்த உயர்வும் மக்களின் ஆர்வத்தில் எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை.
சேலம், மதுரை, திருச்சி, நெல்லை போன்ற நகரங்களிலும் தங்க விற்பனை வெற்றிகரமாக நடந்தது. சுமார் ரூ.14,000 கோடி மதிப்புள்ள தங்கம் ஒரே நாளில் விற்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால், “மக்களுக்கு தங்கத்தின் மீது இருக்கின்ற நம்பிக்கை நிரூபணமாகியுள்ளது. தற்போது தங்க விலை குறையும் நிலை காணப்படுவதில்லை. எதிர்காலத்தில் தங்க விலை மேலும் உயர வாய்ப்பு அதிகம் உள்ளது” என கூறினார்.






