ஆன்மீகம்
அட்சய திருதியை: இன்று தவிர்க்க வேண்டிய பொருட்கள்!

இன்று ஆக்ஷய திருதியை நாட்கிழி தமிழகத்தில் மிகுந்த ஆன்மீக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம், வெள்ளி மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கினால் அது நன்மையைத் தரும் என நம்பப்படுகிறது. ஆண்டின் மிகச் சிறந்த நாள் என்று கருதப்படும் அக்ஷய திருதியையில், நாம் வாங்கும் பொருட்கள் வீட்டு வளத்தையும் செல்வவளர்ச்சியையும் பெருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதே நேரத்தில், சில பொருட்கள் இந்த நாளில் வாங்கக்கூடாது என்பதையும் வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
வாச்து மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, இன்று பழைய அல்லது மற்றவர்கள் பயன்படுத்திய பொருட்களை வாங்கக் கூடாது. குறிப்பாக பழைய வாகனங்கள், செகண்ட் ஹேண்ட் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை வீட்டில் எதிர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என நம்பப்படுகிறது.
அதேபோல், விலங்குகளின் தோலில் செய்யப்பட்ட பொருட்களும் இன்று தவிர்க்கப்பட வேண்டும். இது போலி ஆன்மீக சக்திகளை தூண்டக்கூடும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விலங்கு தோலால் செய்யப்பட்ட பர்ஸ்கள், பெல்ட்கள் மற்றும் காலணிகள் போன்றவை இந்த நாளில் வாங்கக்கூடாதவை.
மேலும், செயற்கை சாயங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மேக்கப் ஐட்டங்கள், பெயிண்ட் வகைகள் போன்றவை வீட்டில் நேர்மறையான ஆற்றலைத் தடுக்கும் என நம்பப்படுகிறது. இவற்றின் தாக்கம் வீட்டில் நன்மை வருவதைத் தடுக்கக்கூடும் என சாஸ்திர நம்பிக்கை உள்ளது.
இன்றைய நாளில் இரும்பு மற்றும் எவர்சில்வர் பொருட்களையும் வாங்கக் கூடாது. சனி பகவானுடன் தொடர்புடைய இரும்பு பொருட்கள் செல்வவளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என கூறப்படுகிறது. கட்டிடப்பொருட்கள், இரும்புச்சட்டிகள், ஸ்டீல் பாத்திரங்கள் ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
மாற்றாக, இன்று நீங்கள் தங்கம், வெள்ளி, உப்பு, அரிசி, புதிய ஆடைகள் மற்றும் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். இது பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில் செல்வம் பெருக வழிவகுக்கும்.











