சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன் படத்தில் ஏன் நான் இல்லை.. அரவிந்த் சாமி..!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் மணிரத்தினத்தின் ஆஸ்தான் நடிகரான அரவிந்த் சாமி இல்லை.
அரவிந்த் சாமி மணிரத்னம் இயக்கத்தில் தளபதி, ரோஜா, கடல், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவர் படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த வேடத்தில் அரவிந்த் சாமி நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் நடிக்கவில்லை.
ஆனால் இப்போது மணிரத்னம் மிகவும் பிரம்மாண்டமாகத் தமிழின் முக்கிய நடிகர்களான கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என பல்வேறு நடிகர்களை வைத்து இயக்கி வரும் படத்தில் அவரது நண்பரும் நடிகருமான அரவிந்த் சாமி ஏன் இல்லை என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
அதற்கு அண்மையில் பத்திரிக்கையாளர் சித்ரா லஷ்மனன் அவரது யுடியூப் சேனலான டூரிங் டாக்கிஸில் அரவிந்த் சாமியிடம் எடுத்த பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தில் ஏன் அரவிந்த் சாமி இல்லை? என கேள்வி கேட்டார். அதற்குப் பதில் அளித்த அரவிந்த் சாமி, “சத்தியமாக எனக்கு ஏன் எனத் தெரியவில்லை. ஒருவேலை எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இந்த படத்தில் இல்லை என அவர் நினைத்திருக்கலாம்.
இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர் இயக்கும் எல்லாம் படங்களிலும் நான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. எனக்கும் எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. நான் அவரோடு இயக்கத்தில் மட்டும் நடிக்கவில்லை. மற்ற இயக்குநர்களுடனும் இணைந்து நடித்து வருகிறேன். கண்டிப்பாக எனக்கு ஏன் கதாபாத்திரம் இருந்தால் அவர் என்னை அழைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எங்களுடைய உறவும் அப்படி தான் உள்ளது.” என அரவிந்த் சாமி கூறியுள்ளார்.